தலைமை நிருபர் ஜனனி
திருச்சி வரகனேரி மேட்டுத் தெருவில் உள்ள மதர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 17 ஆம் ஆண்டு விழா புஷ்பா மஹாலில் கொண்டாப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
விழாவை திரு.SM.யூசிப் தலைமை ஏற்றி நடத்தினார் .
" alt="" aria-hidden="true" />
சிறப்பு விருந்தினராக திருச்சி கோட்டை சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் திரு . ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் மாணவ மாணவிகள் நன்குப் படிக்க வேண்டும் . என்னுடைய அலைபேசி என்னை குறித்து கொள்ளுங்கள் பிரச்சனைக்க இல்லை ஒரு நண்பனாக என்றார். விவசாய குடும்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படித்துதான் தான் இந்த நிலை வந்ததாக கூறினார்.
" alt="" aria-hidden="true" />
பள்ளி தாளாளர் ஜமால்முகமது கூறுகையில் கல்வி எல்லா இடங்களிலும் கிடைக்கும் , ஆனால் எம் பள்ளியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம். கடந்த 16 வருடங்களில் 1400 க்கும் மேற்பட்ட சிறந்த மாணவ , மாணவிகளை உருவாக்கியுள்ளோம். சமூக நலம் கொண்டு எம் பள்ளி நடத்தப்படுகிறது.
" alt="" aria-hidden="true" />
அதை நிருபிக்கும் விதமாக வருடத்தில் 15 சமூக தொண்டு செய்யும் நல் உள்ளங்களை தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக கேடயமும் , சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கிறோம் என்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. அனிஸ் பாத்திமா உடன்யிருந்தார்.
" alt="" aria-hidden="true" />
விழாவில் குழந்தைகளின் நடனமும் நாடகமும் காண்போரை வியப்புக்கு ஆழ்த்தியது.