திருச்சி தேசியக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.வலிகளை வலிமையினால் கடந்த அவளுக்காக இன்று ஒருநாள் அவள் வழியில் அவளை சிறப்பிக்க ஒரு தினமாக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
தனக்கென்று இல்லாமல் தன் குடும்பத்திற்காகவும், உறவுகளுக்காக மட்டும் வாழும் உயிர் பெண். அப்படிப்பட்ட பெண்ணை பெருமிதம் கொள்ளச் செய்யும் தினமே உலக மகளிர் தினம்.அவ்வாறு பெண்களை பெருமைப்படுத்தும் வண்ணம் பல்வேறு இடங்களில் மகளர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன.
" alt="" aria-hidden="true" />
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஈரோடு பாஸ்ட் ட்ராக் மகிலா கோர்ட், மக்கள் நீதி மன்றத்தின் அமர்வு நீதிபதி ரா. மாலதி, கல்லூரி முதல்வர் சுந்தரராமன் கல்லூரி துணை முதல்வர் அகிலாஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாலதி அவர்கள் உரையில்“பெண்களான நாம் இவ்வுலகில் பிறந்ததற்கான காரணத்தை அறியாமலேயே போய்விட்டோம். ஆனால் ஆண்கள் அவர்கள் வேலையை சரியாக செய்கின்றனர் என தெரிவித்தார்.சிறு சிறு கதைகள் மற்றும் உண்மைச்சம்பவங்கள் மூலமும் மாணவிகளையும்அரங்கத்தினரையும் அவரது கவனத்தில் ஈர்த்தார்
மேலும் மகளிர் தின விழாவை முன்னிட்டு மார்ச் 2,3,4 ஆகிய தேதிகளில் கணிதத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இவ்விழாவில் திரளாக கலந்துகொண்டனர்.