இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
April 6, 2020 • Dr. ஆ.இர.விஜயஷங்கர் • தமிழகம்


இந்திய பிரதமரின்  வேண்டுகோளை ஏற்று    கொரோனா  வைரசுக்கு எதிராக  மதுரையில்  சில இடங்களில்   மட்டும் ஏற்றப்பட்ட தீபம்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



கொரோனா வைரசுக்கு  எதிரான போராட்டத்திற்கு  பிரதமரின் வேண்டுகோளை  ஏற்று  மதுரையில்  மக்கள்  வீடுகளில் மற்றும் தெருக்களில்   தீபம்  ஏற்றினார்கள்.  இந்தியா முழுவதும்   கொரோனாவுக்கு எதிரான  போராட்டத்திற்கு  ஒற்றுமையை வெளிகாட்டும் வகையில்  வீடுகள் மற்றும்   தெருக்களில்  பெண்கள் மற்றும்  இளைஞர்கள்  மெழுகுவர்த்தி ஏந்தியும்  செல்போன் ஒளியை காட்டியும்  தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  மதுரையில் பெரும்பாலான இடங்களில்   வீட்டிற்குள்ளே மின் விளக்குகள் எரிந்த வண்ணம் இருந்தன.  மக்கள் பலர் கேள்வி எழுப்பியது என்னவென்றால்  பிரதமர் அவர்கள் டார்ச்லைட்,  மெழுகுவர்த்தி,  செல்போன் லைட் , மற்றும் அகல்விளக்கு போன்றவைகளை  பயன்படுத்த சொன்னார்.  ஆனால் சில இடங்களில்  சில பேர் மட்டும் வானவேடிக்கைகளை  தெருக்களில் பயன்படுத்தினார்.  இந்த வானவேடிக்கை இவர்களுக்கு எப்படி கிடைத்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பொழுது  பட்டாசுகளை எப்படி  வாங்கினார்கள் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக  தெரிவித்தனர்.  விளக்கேற்றுவதன் மூலமாக  நமது ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு பதிலாக   கொரோனா வைரஸிலிருந்து இந்திய மக்களை  காப்பாற்றுவதற்கு என்ன வழிமுறைகள் இருக்கிறதோ  அதனை மத்திய மாநில அரசுகள் செய்தாலே  நம் நாட்டின்  ஒற்றுமையையும்  அரசின் செயல்பாடுகளையும்  அனைத்து உலக நாடுகளும் போற்றக் கூடிய அளவிற்கு இந்தியா திகழும் என்பது  இவர்களின் கருத்து.



Popular posts
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்
Image
தேசிய கல்லூரியில் மகளிர் தின விழா
Image
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் ரயில்வே இன்டர்நெட் டவர் இடிந்து வீடு மற்றும் டிரேடர்ஸ் சேதம்
Image